வடமாநில தொழிலாளியிடம் பணம் பறிப்பு: 6 பேர் கைது

புழல்: சோழவரம் அருகே ஞாயிறு கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 10க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தங்கி, வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, மழையில் நெல்மூட்டைகள் நனையாமல் இருக்க, அவற்றின்மீது, அவர்கள் தார்பாய் போட்டு மூடி கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், அவர்களை சரமாரியாக தாக்கியது. பின்னர், ராம்பாலா டைமன்ட் என்பவரிடமிருந்து, ரூ.15 ஆயிரத்தை பறித்து கொண்டு அக்கும்பல் தப்பியோடியது. புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஞாயிறு கிராமத்தை சேர்ந்த மகேஷ் (19), கருப்பு(எ)பிரசாந்த் (22), சாரதி (16), விக்கி (எ) விக்னேஷ் (19), சூர்யா (20), அன்பரசு (20) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: