சொகுசு கப்பலில் போதை விருந்து ஆர்யன் கான் வழக்கை விசாரிக்கும் டெல்லி சிறப்பு குழு மும்பை வந்தது: சர்வதேச தொடர்புகள் வெளியாகுமா?

மும்பை:  மும்பை அருகே கடலில் கடந்த மாதம் 2ம் தேதி சொகுசு கப்பலில் தேசிய போதை பொருள் தடுப்பு துறையின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழு நடத்திய அதிரடி சோதனையில் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த மாதம் 30ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கை மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான குழு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க வான்கடே ரூ.25 கோடி கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இவர் போலி ஜாதி சான்றிதழ் கொடுத்தும், மதத்தை மறைத்தும் பணியில் சேர்ந்ததாகவும் மகாராஷ்டிரா அமைச்சர் நவால் மாலிக் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.   

இந்த சர்ச்சைகள் காரணமாக, ஆர்யன் கான் வழக்கு உட்பட மும்பை போதை பொருள் தடுப்பு  துறை அதிகாரிகள் விசாரித்து வந்த 6 போதை பொருள் வழக்குகள், டெல்லியில் உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவின் விசாரணைக்கு நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளில் உள்ளூர் மற்றும் வௌிநாட்டு தொடர்புகள் இருப்பது பற்றி இது விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை தேசிய போதை பொருள் தடுப்பு  துறையின் துணை இயக்குனர் ஜெனரல் சஞ்சய் சிங் தலைமையிலான 5 பேர் குழு விசாரிக்க உள்ளது. இதற்காக இக்குழு நேற்று மும்பை வந்து சேர்ந்தது. ‘இந்த வழக்குகள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரிக்கப்படுமா?’ என்ற கேள்விக்கு, ‘கூடுதல் விசாரணை மட்டுமே தற்போது நடத்தப்படும். என்றார்.

Related Stories: