தென்மாநில முதல்வர்கள் திருப்பதியில் 14ல் கூட்டம்: சிறப்பு விருந்தினராக அமித்ஷா பங்கேற்பு

திருப்பதி: திருப்பதியில் வரும் 14ம் தேதி நடக்கும் தென்மாநில முதல்வர்கள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அடுத்த திருச்சானூர் அருகே தனியார் ஓட்டலில் வரும் 14ம் தேதி தென்மாநில 29வது கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை, கேரள  முதல்வர் பினராய் விஜயன், அந்தமான் நிக்கோபர் லட்சத்தீவு கவர்னர்கள், மாநில தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார்.

கலெக்டர் முருகன் கூறுகையில், ‘‘அமித்ஷா கலந்து கொள்ள உள்ள இந்த கூட்டத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும்,’’ என்றார்.

Related Stories: