கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருமலை : திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் மாநிலம் முழுவதும் பல்வேறு கோயில்கள் உள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பண்டிகை நாட்களை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்(சுத்தம் செய்யும் பணி) நடைபெறும்.  

இந்நிலையில், நாளை தீபாவளி பண்டிகை(ஆஸ்தானம்) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நேற்று திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயில் மற்றும் கோதண்டராமர் சுவாமி கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.  

இதன் ஒரு பகுதியாக கோயில் வளாகம், சுவர், பூஜை பொருட்கள், கொடிமரம் போன்றவற்றை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. திருநாமம்,  திருசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், குங்குமம் போன்ற வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. இதில்,  சிறப்பு துணை செயல் அதிகாரி பார்வதி, ராஜேந்திரடு, உதவி செயல் அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் நாராயணா, கோயில் ஆய்வாளர் காமராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: