முத்துராமலிங்க தேவர் 59-வது குருபூஜை விழா: பெண் காவலரை கிண்டல் செய்த 2 பேர் கைது; 112 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

சென்னை: சென்னை நந்தனத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசை கிண்டல் செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய 3 பிரிவுகளில் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பசும்பொன்னில் உரிய அனுமதி இல்லாமல் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டிய காரணத்திற்காக 112 இருசக்கர வாகனங்கள் , இரண்டு கார்களை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர். அதேபோல் மதுரையில் 12 இருசக்கர வாகனங்கள், ஒரு ஆட்டோவை மாநகர போலீசார் பறிமுதல் செய்தனர்.

அத்துடன் மதுரை கோரிப்பாளையம் அருகே அரசு பேருந்து கண்ணாடி உடைத்த மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59வது குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. மதுரை மாவட்டத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் நேற்று முதல்வர் முக ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி  விழா நேற்று நடைபெற்றது.

Related Stories: