பெரியகுளம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, பெரியகுளத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணைமுதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலையணிவித்து மரியாதை செய்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 114வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கம்பம் சாலையில் உள்ள அவரது சிலைக்கு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தேவர் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செய்தார்.
