மே.வங்க பாஜ எம்எல்ஏ திரிணாமுல்லுக்கு தாவல்

கொல்கத்தா:  மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலின் போது மம்தாவை தோற்கடிக்க திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களை பாஜ தன் கட்சிக்கு இழுத்தது. ஆனால், கடந்த மாதம் வெளியான தேர்தல் முடிவுகள் திரிணாமுல் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரசுக்கு இம்மாநில பாஜ எம்எல்ஏ.க்கள் தாவி வருகின்றனர். கடந்த 5 மாதங்களில் ஏற்கனவே 4 பேர் இணைந்துள்ள நிலையில், நேற்று ராய்கான்ச் தொகுதி பாஜ எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி, 5வது நபராக திரிணாமுல்லில் இணைந்தார். பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து பாஜ.வில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், பாஜ.வில் சுதந்திரமாக செயல்பட முடியாது என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>