பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட புகாரில் சிறப்பு வல்லுநர் குழு விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெகாசஸ் விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அதிமுக்கியமானவை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை வசித்து வருகிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி அமர்வு தீர்ப்பளிக்கிறது. மக்களின் அந்தரங்க உரிமையை செல்போன் ஒட்டுக்கேட்பு பாதிக்கிறது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பத்திரிக்கையாளர் மட்டுமின்றி அனைத்து குடிமக்களின் தனி நபர் ரகசியங்களும் காக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு தனிமனித உரிமைகளும் முக்கியம்.

உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் பல்துறை நிபுணர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும். இணைய குற்றம் மற்றும் தடயவியல் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இணைய குற்றத் தடுப்பில் நிபுணத்துவம் பெற்ற முன்னாள் உளவுத்துறை தலைவர் அலோக் ஜோஷி குழுவில் இடம்பெற்றுள்ளார். சைபர் செக்கியூரிட்டி மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணரான நவீன் குமார் சவுதரியும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

Related Stories: