நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதாக ஒன்றிய அரசு நாடகம்; மம்தாபானர்ஜி குற்றசாட்டு

கொல்கத்தா : கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. 100 கோடி தடுப்பூசி போடப்பட்டது மிகப்பெரிய சாதனை என குறிப்பிட்டு பிரதமர் மோடியும் பேசியிருந்தார். இந்நிலையில் சிலிகுரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுப்பூசி போடுதல் என்பது 2 டோஸ் தடுப்பூசியும் போட்டால்தான் முழுமையடையும் என்றும் நாடு முழுவதும் 29.5 கோடி மக்கள் மட்டுமே 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டிருப்பதாகவும் கூறினார்.

ஆனால் ஒன்றிய அரசு நாட்டின் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டு விட்டது போல பாசாங்கு செய்து வருவதாக அவர் விமார்சனம் செய்துள்ளார். கோடிக்கணக்கான மக்கள் தடுப்பூசி போடப்படாமல் இருப்பதாக கூறிய அவர் மேற்குவங்கத்திற்கு 14 கோடி தடுப்பூசிகள் தேவையுள்ள நிலையில் 7 கோடி தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார். இதே போல இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் போடப்பட்டிருக்கிறது என்ற ஒன்றிய அரசின் கூற்று உண்மை அல்ல என சிவசேனா கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி டோஸ் எண்ணிக்கையை கணக்கிட்டது யார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>