பல்லடம் அருகே பஞ்சமி நிலத்தை மீட்டு தர கோரி கிராம மக்கள் போராட்டம்; 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பஞ்சமி நிலத்தை மீட்டு தர கோரி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் பந்தர்கள் அமைக்க கிராம மக்கள் முயற்சித்ததால் பரபரப்பு  ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்து அலகு மலையில் 300 க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவ்ரகள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே 14 ஏக்கருக்கு மதிப்பிலான பஞ்சமி நிலம் காலியாக இருந்தது. இந்நிலையில் வேறொரு தரப்பை சேர்ந்த நபர் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் சொந்த வீடில்லாத தங்களுக்கு பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டுமென்றும், வலியுறுத்தியும் தாழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பஞ்சமி நிலத்தில் பந்தல் போட்டு குடியேற முயன்ற மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தின்போது கைது செய்து அழைத்து செல்லப்பட்ட 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: