100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை கொண்டாடும் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்: ப.சிதம்பரம் ட்வீட்

சிவகங்கை: 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும் என ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் என மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். நாட்டிலேயே அதிகபட்சமாக போபாலில் பெட்ரோல் லிட்டர் ரூ.116ஐ தாண்டி உள்ளது.

பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ110ஐ தாண்டி விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு தொல்லை கொடுப்பதில் மோடி அரசு சாதனை படைத்துள்ளது என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.

இந்தநிலையில் மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்; 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு இருக்கும் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: