‘மலைக்க வைத்த’ 12 அடி மலைப்பாம்பு

மேலூர் : மேலூர் அருகே, செமினிப்பட்டி ஊராட்சியில் உள்ள முத்துச்சாமிபட்டியில் குடியிருப்பு பகுதியில் நேற்று மலை மலைப்பாம்பு ஒன்று இரை தேடி ஊர்ந்து வந்தது. பாம்பின் நீளத்தை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் இது குறித்து சிங்கம்புணரி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் 12 அடி நீளம் உள்ள மலைபாம்பை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிரான்மலையில் மலைப்பாம்பை விடுவிடுத்தனர்.

Related Stories:

More
>