சில்லி பாயின்ட்...

* தெற்காசிய கோப்பையை வென்ற சுனில் சேட்ரி தலைமையிலான இந்திய அணி, உலக தர வரிசை பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 106வது இடத்தை பிடித்துள்ளது.

* டென்மார்க் விக்டர் ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து  நேற்று களமிறங்கினார். அவர் 21-16,  12-21, 21-15  என்ற செட்களில் தாய்லாந்து வீராங்கனை பூசனனை  வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

* யுஇஎப்ஏ சாம்பியன்ஸ்  லீக் போட்டியில் லீக் ஆட்டங்களில் நேற்று மான்செஸ்டர் யுனைடட்(இங்கிலாந்து) 3-2 என்ற கோல் கணக்கில் அட்லாண்டா(இத்தாலி) அணியை வீழ்த்தியது. அதேபோல் பேயர்ன் மியூனிக் (ஜெர்மனி) 4-0 என்ற கோல் கணக்கில் பெனிபிசியா(போர்ச்சுகல்) அணியையும், பார்சிலோனா(ஸ்பெயின்) 1-0 என்ற கோல் கணக்கில் டைனமோ கிவ்(உக்ரைன்) அணியையும் வீழத்தின.

* ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கிரம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில்  ஆஸ்டபென்கோ(லாத்வியா), சினியகோவா(செக் குடியரசு) இணை 5-7, 6-3, 11-9 என்ற செட்களில்  குசமோவா(ஸ்லோவாக்கியா குடியரசு), பனோவா(ரஷ்யா) இணையை வீழ்த்திய அரையிறுதிக்கு முன்னேறியது.

* ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகளை தேர்வு செய்வதற்கான ஏலம் அக்.26ம் தேதி நடக்கிறது. அதற்காக இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான ‘மான்செஸ்டர் யுனைடட்’ அணியை நடத்தும் ‘தி குளோசர் பேமிலி’ நிறுவனமும் விண்ணப்பித்துள்ளது.

* கொரோனா தொற்று காரணமாக மருத்துவ கண்காணிப்பில் இருந்த இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாசுக்கு, நேற்றைய சோதனையில் தொற்று இல்லை என்பது உறுதியானது.

* டி20 உலக கோப்பையை யார் வெல்வார்கள் என்பதை கணிப்பது கடினம். ஆனாலும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் வாய்ப்பில் உள்ளன’ என்று  வெ.இண்டீஸ் முன்னாள் வேகம் இயன் பிஷப் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>