புகார்களை விசாரிக்க சிறப்பு காவல் அதிகாரி கோரி மனு: ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: மதுரை, கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் சுரேஷ்குமார் ஐசக்பால், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் உள்ள காவல்நிலையங்களில் காவலர்கள் பற்றாக்குறை இருப்பதால், புகார்களை பெற்று வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால், தடயங்கள் அழியும் நிலை ஏற்படுவதால் குற்றவாளிகள் தப்பிக்கும் சூழல் ஏற்படுகிறது. புகார் அளிக்க வருவோரும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், புகார்களை பெற்று விசாரணை செய்வதற்கென சிறப்பு காவல் அதிகாரியை நியமிக்கவும், புகார்களை உடனடியாக பதிவு செய்து சிஎஸ்ஆர் ரசீது வழங்கவும், ஒவ்வொரு புகாரின் மீதான விசாரணையையும் தனி டைரியில் பதிவு செய்யவும், முறையாக விசாரித்து புகார்களின் மீது தீர்வு காணவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் தெரிவித்தார். இதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: