பிஎஸ்ஜி வெற்றி

ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் தொடரில் நேற்று   ஏ பிரிவில் உள்ள பிஎஸ்ஜி (பிரான்ஸ்), ஆர்பி லீப்ஜிக் (ஜெர்மனி)  அணிகள்  மோதின. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த ஆட்டத்தில்  பிஎஸ்ஜி 3-2 என்ற கோல் கணக்கில்  வென்றது. பிஎஸ்ஜி அணியின் எம்பாப்பே (9வது நிமிடம்), மெஸ்ஸி (67, 74வது நிமிடம்) கோல் அடித்தனர். ஆர்பி சார்பில்  ஆந்த்ரே சில்வா (28’), நோர்டி முகியிலே (57’) கோல் போட்டனர்.

கிவியில் நடந்த டி  பிரிவு ஆட்டத்தில்  ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) 5-0  என்ற கோல் கணக்கில்  ஷக்தர் டொனெட்ஸ்க் (உக்ரைன்) அணியை துவம்சம்  செய்தது.  பி பிரிவில் இருக்கும் லிவர்பூல் (இங்கிலாந்து) 3-2 என்ற கோல் கணக்கில்   அத்லெடிகோ டி மாட்ரிட் (ஸ்பெயின்) அணியை வீழ்த்தியது.

Related Stories:

More
>