பெரம்பலூரில் ஆயுதபூஜைக்கு பிறகு காய்கறி விலையேற்றம்-அவரை, முருங்கை கிலோ ரூ.100க்கு விற்பனை

பெரம்பலூர் : பெரம்பலூரில் ஆயுதபூஜைக்குப் பிறகு காய்கறி விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது. அவரையும், முருங் கையும் சதமடித்தன.பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகக் காய்கறி விலை கிடுகிடு வென உயர்ந்துள்ளது இல்லத்தரசிகளை இம்சைக்கு உள்ளாக்கியுள்ளது. தொடர் மழையால் வரத்துகுறைவு, உள்மாவட்டத்தில் உற்பத்தி குறைவு என்றத் தவிர்க்க முடியாத காரணங்களால், சமையலில் தவிர்க்க முடி யாத தக்காளியின் விலை ஆயுத பூஜைக்குப் பிறகு அன்னாந்து பார்க்க வைக்கிறது.

ஆயுதபூஜைக்கு முன் பு கிலோ ரூ25க்கும்,30க்கும் விற்கப்பட்டத் தக்காளி, தற் போது மார்கெட்டில் கிலோ ரூ60க்கு விற்கப்படுகிறது. உழவர்சந்தையில் ரூ52க்கு விற்கப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்திக் குறைவு என்பதாலும், கர்நாடகாமாநில எல்லையிலிருந்து 25-27 கிலோ எடைகொண்ட பெட்டி ரூ1200 -1300க்கு பெறப்படுகிறது. இதனால் மார்கெட்டில் 60க்கும், கிராமப்புறங்களில் 70 க்கும் தக்காளி விற்கப்படுகிறது.

கோழி அவரை உழவர் சந் தையில் கிலோ ரூ100க்கும், மார்க்கெட்டில் ரூ120க்கும், ரூ130க்கும் விற்கப்படுகிற து. நைஸ்(பட்டை)அவரை உழவர் சந்தையில் ரூ72க் கும், மார்க்கெட்டில் ரூ80க் கும், ரூ100க்கும் விற்கப்ப டுகிறது. திண்டுக்கல், ஒட்டன் சத்திரம் பகுதியிலிரு ந்து இறக்குமதி செய்யப் படும் இளம்பச்சை நிறத் தில் நீண்டிருக்கும் முருங்கைக்காய், உழவர் சந்தை யில் கிலோ ரூ80க்கும், மார்க்கெட்டில் கிலோ ரூ100 க்கும் விற்கப்படுகிறது.

உழவர் சந்தையில் கேரட் ரூ60,64க்கும், பீன்ஸ் ரூ68 க்கும், மார்க்கெட்டில் இரண் டும் கிலோ ரூ80க்கும், மாங் காய் உழவர் சந்தையில் கிலோ ரூ72க்கும் விற்கப் படுகிறது. பெல்லாரி உழ வர் சந்தையில் கிலோ (பழ சு) ரூ52க்கும், (புதுசு) ரூ40க் கும் விற்கப்படுகிறது. சின் னவெங்காயம், முட்டை கோஸ், சவ்சவ், பீட்ரூட் ஆகியன மட்டுமே ரூ30க்கு குறைவாக உழவர் சந்தையில் விற் கப்படுகிறது. இவைகளும் மார்க்கெட்டில் அரை சதம் அடித்து நிற்கிறது.ஆயுதபூ ஜைக்குப் பிறகு அன்னாந் து பார்க்கவைத்துள்ள காய் கறியின் விலையேற்றத்தா ல் இல்லத்தரசிகள் பலரும் புலம்பி வருகின்றனர்.

Related Stories: