கவியருவியில் ரம்மியமாக கொட்டும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

ஆனைமலை : பொள்ளாச்சியை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் அடிக்கடி, பெய்த கன மழையால் கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக,  சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின், சில நாட்களில் தண்ணீர் குறைந்ததையடுத்து கடந்த 16ம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டது.

ஆனால், அந்நேரத்தில்  தொடர்ந்து பெய்த கன மழையால், 17ம் தேதி மதியம் கவியருவிக்கு தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது. பயணிகள் குளிக்கும் இடத்தை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால்,  பாதுகாப்பு கருதி கவியருவிக்கு  சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை காட்டாற்று வெள்ளம் குறைந்தது.

 கவியருவியில் தண்ணீர் ரம்மியமாக கொட்டியதால், சுற்றுலா பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். நேற்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. அங்கு வந்த சுற்றுலா பயணிகள் வெகுநேரம் குளித்து மகிழ்ந்தனர். இருப்பினும், ஆங்காங்கே வனத்துறையினர் நின்று கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

More
>