விலைவாசி உயர்வை குறைக்க டீசல் விலையை குறைப்பதுதான் ஒரேவழி: இபிஎஸ் யோசனை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், இதர மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியவற்றின் விலையும் விஷம்போல் உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் அலுவலகம் செல்வோர், தனியார் வாகனங்களில் பள்ளிக்கு செல்பவர்கள், சுற்றுலா பயணிகள், ஏழை எளிய நடுத்தர பிரிவினர் என அனைவரும் கூடுதல் சுமைக்கு தினந்தோறும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பாசனத்திற்காக டீசல் பம்பு செட்டுகளை பயன்படுத்தும் விவசாயிகளும், தொழில் முனைவோர்களும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

தற்போதைய நிலையில், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வை ஓரளவு குறைக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி டீசல் விலையை குறைப்பதுதான். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் உயர்ந்து கொண்டே செல்லும் விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்தும் வகையில் டீசல் மூலம் அன்றாடம் உயர்ந்து கொண்டே செல்லும் மதிப்பு கூட்டு வரி வருவாயினை கருத்தில் கொண்டு, டீசல் விலையை மாநில அரசின் சார்பில் ஓரளவு குறைக்கவும், மத்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை கொடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு வரும் லாபத்தில் ஒரு பகுதியையும், மத்திய அரசின் வரியையும் ஓரளவு குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>