டிச.1ம் தேதி மதுரையில் இருந்து சீரடி யாத்திரை சிறப்பு ரயில்

சென்னை: ஆன்மீக பயணத்திற்காக சீரடி குரு கிருபா யாத்திரை சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 1ம் தேதி மதுரையில் இருந்து புறப்படுகிறது. திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், சென்னை - எழும்பூர் வழியாக மஹாராஷ்டிரா மாநிலம் செல்லும் இந்த சிறப்பு ரயில் சீரடி சாய்பாபா, பண்டரிபுரம் பாண்டுரங்கா, சிங்கனாப்பூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில்கள் மற்றும் ஆந்திராவில் உள்ள மந்த்ராலயம் ஆகிய இடங்களை பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏழு நாட்கள் சுற்றுலா செல்லும் இந்த சிறப்பு ரயிலில் கட்டணமாக ஒருவருக்கு ரூ.7,060 வசூலிக்கப்படும். கொரோனா தொற்று ஏற்படாத வகையில் யாத்திரை ரயில் இயக்கப்படுவதால், பயணிகள் கண்டிப்பாக இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மாநில, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கட்டண சலுகை உண்டு. மேலும், இதுகுறித்து விவரங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி-யின்  irctctourism.com என்ற இணையதள முகவரி மற்றும் சென்னை 90031 40680, மதுரை 82879 31977, திருச்சி 82879 31974 ஆகிய அலுவலக எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: