நடுக்கடலில் நாகை, பூம்புகார் மீனவர்கள் இடையே பயங்கர மோதல்!: ரூ.15 லட்சம் மதிப்பிலான வலைகளை கிழித்து எறிந்ததால் பதற்றம்..!!

நாகை: நாகையில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த பூம்புகார் மற்றும் நாகை மீனவர்கள் திடீரென்று பயங்கரமாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பூம்புகாரை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மீனவர்கள், 7 விசை படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அதேபோன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் பைபர் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பூம்புகார் மீனவர்கள் தடை செய்யப்பட்ட ஸ்பீட் இன்ஜினை பயன்படுத்தியதற்கு நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பூம்புகார் மீனவர்கள், பைபர் படகுகள் மீது விசை படகுகளை மோதவிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக நாகை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. பூம்புகார் மீனவர்கள் நடத்திய தாக்குதலில் 15 லட்சம் மதிப்பிலான வலைகளை கிழித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக நாகை மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து உரிய முடிவெடுக்க நாகை, அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்கள்.

Related Stories: