கோயிலின் நகைகளை உருக்கும் திட்டத்ைத எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 26ம் தேதி போராட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு

சென்னை: கோயில் நகைகளை உருக்கும் திட்டத்துக்கு எதிராக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:

நகைகளை உருக்கும் திட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. தங்கத்தை உருக்கும் திட்டம் முறைகேட்டுக்கு வழிவகுக்கும். எனவே, இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

 இதை வலியுறுத்தி வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். இத்திட்டத்துக்கு எதிராக வரும் 17ம் தேதி வேலூர், 18ம் தேதி திருச்சி, 20ம் தேதி சேலம், 21ம் தேதி மதுரை, 22ம் தேதி நெல்லையில் பிரசாரம் செய்யவிருக்கிறோம். தங்க நகைகளை உருக்கி எவ்வளவு வங்கியில் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறநிலையத்துறை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More
>