வால்பாறையில் 2ம் சீசன் துவக்கம்: சுற்றுலா பயணிகள் ஆர்வம்

வால்பாறை: வால்பாறையில் இரண்டாம் கட்ட சீசன் களை கட்ட தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், வால்பாறையில் தற்போது நிலவும் காலநிலை நன்றாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் வால்பாறையை வட்டம் அடித்தபடி உள்ளனர். வால்பாறையில் குறைந்த செலவில் நிறைந்த குளுமையும், மன நிம்மதியையும் வால்பாறையில் பெற முடிவதாக சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். எனவே, வால்பாறையை சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுத்தாக கூறும் சுற்றுலா பயணிகள், படகு இல்லம் மற்றும் பூங்கா பணிகள் விரைவில் முடித்து, நடைமுறைக்கு வந்தால் கூடுதல் நாட்கள் வால்பாறையில் தங்கலாம் என்கின்றனர்.

மேலும், ஆழியார் அணை, ஆழியார் வண்ண மீன் காட்சியகம், குரங்கருவி, லோம்ஸ் காட்சிமுனை, டைகர் பள்ளதாக்கு, பாலாஜி கோயில், நல்லமுடி பூஞ்சோலை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நீரார் அணை, சோலையார் அணை, மலை குகை சுரங்க கால்வாய்கள், கூழாங்கல் ஆறு ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. மழை மற்றும் இதமான காலநிலை, பசுமை தொடர்வதால் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகளில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதாக காட்டேஜ் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories: