கந்தர்வகோட்டை பகுதியில் செம்மறி ஆடு வளர்ப்பு மும்முரம்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் தற்போது நல்லமழை பெய்து வருகிறது. மழைநீரை பயன்படுத்தி விவசாயம் சார்ந்த தொழில்கள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதேசமயம் மழைநீரால் நிலங்களின் வரப்பு ஓரங்களிலும், தரிசு நிலங்களிலும் இயற்கையாகவே ஆடு மாடுகள் தின்னும் புல்வகைகள் பசுமையாக வளர்ந்துள்ளன.

இப்பகுதி விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு செயற்கை தீவனங்களை குறைத்துக்கொண்டு இயற்கை தீவானங்களான புல், வேப்ப தலை, ஆல இலைகளை கொண்டுவந்து கால்நடைகளுக்கு கொடுக்கிறார்கள். இதனால் கறவை மாடுகள் அதிகளவில் பால் தருவதாக கூறுகிறார்கள். மேலும் வெளி மாவட்டங்களிலிருந்து கீதாரி என்று சொல்லக்கூடிய செம்மறி ஆடு வளர்ப்பவர்கள் கந்தர்வகோட்டை பகுதியில் பட்டிகட்டி ஆடுகளை வளர்த்து வருகிறார்கள்.

 தற்போது தரிசு நிலங்களில் புல்வகைகள் அதிகம் வளர்ந்துள்ளதால் ஆடுகள் இளைப்பாற புல்களை சாப்பிட ஆடு மேய்ப்பவர்களும் மகிழ்ச்சியுடன் மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று வருகிறார்கள். மேலும் அவர்கள் ஆடுகளுக்கு தேவையான பசும்புல் இப்பகுதிகளில் அதிகம் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

Related Stories: