நெல் ஈரப்பதம் குறித்து ஆய்வு ஒன்றிய நிபுணர் குழு தமிழகம் வருகிறது

புதுடெல்லி: ‘தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி புதுடெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், கிருஷிபவனில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான இணைச்செயலாளர் பார்த்தா.எஸ்.தாசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், ‘தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட அதிகமாக பெய்துள்ளது. அதனால், நெல்லில் கூடுதல் ஈரப்பதம் காணப்படுகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதித்துள்ளனர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமி ருந்து 22% ஈரப்பதம் அடைந்த நெல்களை கொள்முதல் செய்யும்படி அது சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,’ என வலியுறுத்தினார். இந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தாஸ், ‘தமிழகத்துக்கு விரைவில் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை அனுப்பி, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,’ என கூறியதாக விஜயன் தெரிவித்தார்.

Related Stories: