2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது : ஈபிஎஸ்- ஓபிஎஸ் கூட்டறிக்கை!!

சென்னை : தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த அக்.6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற்றது.இந்த இருகட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 74 மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளின்படி, அதிமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக படுதோல்வி அடைந்தது.  

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.. அதில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தியதால்தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது.திமுக பெற்ற வெற்றி புறவாசல் வழியாக பெற்ற வெற்றி. திமுக, தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்கள், சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை பட்டியலிட்டால் நாடு தாங்காது. விதிமீறல்கள் தொடர்பாக அதிமுக கொடுத்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.பொய் வழக்கு போடப்பட்டு தேர்தல் பணி செய்யவிடாமல் அதிமுக தொண்டர்கள் தடுக்கப்பட்டனர். வாக்கு எண்ணிக்கையை வேண்டுமென்றே தாமதப்படுத்தினர். பல இடங்களில் வெற்றி பெற்ற அதிமுக தொண்டர்களை தோல்வியுற்றவர்களாக அறிவித்துவிட்டனர், என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories: