அரியானா ஆசிரம மேலாளர் கொலை வழக்கு.! சாமியார் ராம் ரஹீமுக்கு அக்.18ல் தண்டனை அறிவிப்பு: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  அரியானாவை சேர்ந்த சர்ச்சை சாமியார் ராம்ரஹீம்(55). இவர் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவராக இருந்தார். சிர்சாவில் ஆசிரமம் அமைத்து நடத்தி வந்த இவர் அங்கு இரு பெண்களை பலாத்காரம் செய்தார். இந்த குற்றச்சாட்டில் நீதிமன்றம் சாமியாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. 2002ம் ஆண்டு ஆசிரமத்தின் மேலாளராக இருந்த ரஞ்சித்சிங் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கிலும் ராம் ரஹீம் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி அக்.18ம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Stories: