யு-17 மகளிர் உலக கோப்பை சின்னம் இபா அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள யு-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடருக்கான சின்னத்தை, சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு பிபா அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நேற்று வெளியான இந்த சின்னம், ஆசிய பெண் சிங்கத்தின் உருவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மன உறுதி, பிறரிடம் அன்பு செலுத்துவது மற்றும் குழுவாக ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலமாக மகளிர் மற்றும் சிறுமிகளுக்கு உணர்வூட்டி ஊக்கமளிப்பதை குறிக்கும் வகையில் இந்த சின்னத்திற்கு ‘இபா’ என பெயரிட்டுள்ளதாக பிபா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது. இந்த தொடர் இந்தியாவில் 2022 அக். 11ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும்.

Related Stories: