காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் 5 ஒன்றியங்களில் 5,34,130 வாக்குகள் பதிவு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி என இரு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களிலும் இரண்டாம் கட்ட தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் நடைபெற்றது. மாவட்டத்தில் 11 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் களுக்கும் 98 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும் 269 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் 1793 வார்டு உறுப்பினர்கள் தேர்தல்போட்டியில் களத்ததில் இருந்தனர்.

மாவட்டம் முழுவதும் 94 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 1281 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவிற்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாக்கு சாவடிகளுக்கு அனுப்பப்பட்டு தேர்தல் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் மட்டும் வாக்குப்பதிவின் போது தாமதம் ஏற்பட்டு பின் சமாதானத்தின் பேரில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டத்தில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 144 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 986 வாக்குகள் பதிவாகியது.

மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 86 ஆயிரத்து 10 வாக்காளர்கள் உள்ள நிலையில்5,34,130 வாக்காளர்கள் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். மேலும் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் 82 சதவீதமும் உத்தரமேரூர் ஒன்றியத்தில் 85 சதவீதமும் வாலாஜாபாத் ஒன்றியத்தில் 86சதவீதமும் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 86.87சதவீதமும் குன்றத்தூர் ஒன்றியத்தில் 67.38 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 77.86% நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குகள் பதிவாகியுள்ளன.

* செங்கல்பட்டு மாவட்டத்தில் 75.51 சதவீதம்

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அடங்கிய காட்டாங்கொளத்தூர், சித்தாமூ,ர் மதுராந்தகம் மற்றும் அச்சரப்பாக்கம் ஆகிய ஒன்றியங்களுக்கு நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் அச்சரப்பாக்கம் ஒன்றியத்தில் 85.24 சதவீதமும், சித்தாமூர் ஒன்றியத்தில் 82.24 சதவீதமும், காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் 64.63 சதவீதமும், மதுராந்தகம் ஒன்றியத்தில் 87.86 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 75. 51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் நடைபெற்ற முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 66.71 சதவீத வாக்குகள் பதிவானது. இரண்டு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவில் பிரச்னைகள் இன்றி அமைதியாக முடிந்ததால், எந்த வாக்குசாவடியிலும் மறுவாக்கு பதிவு நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: