பெங்களூரு சிறையில் 4 ஆண்டாக இருந்தபோது சசிகலாவுடன் பேசியவர்கள் விவரம் சேகரிப்பு தீவிரம்: அதிமுக மூத்த நிர்வாகிகள் கலக்கம்

சென்னை: பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகாலம் இருந்தபோது சசிகலாவுடன் தொடர்பு கொண்டு பேசியவர்கள் விவரத்தை சேகரிக்கும் பணியில் பெங்களூரு தடவியல் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். அவருடன் அதிமுக நிர்வாகிகள் யாராவது ேபசினார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், அதிமுக மூத்த நிர்வாகிகள் பலர் கலக்கமடைந்துள்ளனர். வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜெயிலில் சசிகலாவிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த 4 செல்போன்களையும் தடயவியல் துறைக்கு பெங்களூரு போலீசார் அனுப்பி உள்ளனர்.  

சிறையில் இருந்த சசிகலா யார், யாரை தொடர்பு கொண்டு பேசினார். யார், யார் எல்லாம் சசிகலாவை தொடர்பு கொண்டு பேசினார்கள் என்ற தகவல்களை அவர்கள் திரட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அதிமுக மூத்த தலைவர்கள் யாராவது சசிகலாவுடன் தொடர்பு கொண்டு பேசினார்களா, என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் குடும்பத்தில் இருந்து சசிகலாவுடன் அடிக்கடி பேசியவர்கள் யார்? என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால், விரைவில் இது தொடர்பான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

சசிகலாவின் செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருவது அதிமுகவில் சிலரிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எங்கே, சசிகலாவின் ஆதரவாளர் என்று  தங்களை குத்திவிடுவார்களோ என்று பேசியவர்கள் கலக்கமடைந்துள்ளனர். அவர்கள் பயந்து போய் உள்ளனர். அதே நேரத்தில் அதிமுகவில் மீண்டும் தனது செல்வாக்கை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று சசிகலா திட்டமிட்டுள்ளார்.  இதற்காக அவர் வருகிற 16ம் தேதி அவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று மரியாதை செலுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அன்றைய தினம் அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாள் ஆகும். அன்றைய தினம் மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை அவர் தொடங்க திட்டமிட்டுள்ளார்.

Related Stories: