பட்டிவீரன்பட்டி தாமரைக்குளம் கண்மாயில் சேதமடைந்த மதகுகளால் வீணாகும் தண்ணீர்-சீரமைக்க கோரிக்கை

பட்டிவீரன்பட்டி : பட்டிவீரன்பட்டி  அருகே தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. சுமார் 113 ஏக்கர் பரப்பளவில்  அமைந்துள்ள இந்த கண்மாய் மூலம் 600 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய்க்கு தற்போது மருதாநதி  அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த கண்மாயில் 10க்கும்  மேற்பட்ட இடங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் மதகுகள் உடைந்த  நிலையில் உள்ளன.

இதனால் உடைந்த மதகுகள் வழியாக அதிகளவில் தண்ணீர்  வெளியேறுவதால், நிலங்களில் தண்ணீர் தேங்குகிறது. இதனால் விவசாயிகள் நடவு  பணிகளை துவக்க முடியாமல் உள்ளனர்.இதுகுறித்து அய்யன்கோட்டை பகுதி  விவசாயிகள் கூறுகையில், ‘இந்த கண்மாயில் உள்ள மதகுகள் கட்டப்பட்டு 50  ஆண்டுகளுக்கும் மேலாகிறது. உரிய பராமரிப்பில்லாததால் பல இடங்களில் மதகுகள்  உடைந்துள்ளதால், தண்ணீர் வீணாகிறது. மதகுகளை புதிதாக மாற்றியமைத்தால்,  இப்பகுதியில் 3 போகம் விளையும். சேதமடைந்த மதகுகளை அகற்றிவிட்டு, புதிய  மதகுகளை பொருத்த சம்பந்தபட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: