மணம், சுவை மிகுந்தது குமரி மாவட்ட கிராம்புக்கு புவிசார் குறியீடு

நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: குமரி மாவட்டத்தில் சுமார் 760 ஹெக்டர் பரப்பில் கிராம்பு பயிரிடப்படுகிறது. இது தமிழ்நாட்டில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதம். இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி1100 மெ.டன். இதில் 1000 மெ.டன் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராம்பு உற்பத்தியில் 65 சதவிகிதமான சுமார் 650 மெ.டன் குமரி மாவட்டத்தில் தான் உற்பத்தியாகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் கிராம்பு மொட்டுகளிலுள்ள வாசனை எண்ணெயின் சதவீதம் அதிகபட்சமாக காணப்படுகிறது. இத்தகைய மணம் மற்றும் சுவை மிகுந்த கிராம்பு நம் மாவட்டத்திற்கு தனித்தன்மை வாய்ந்ததாகும். இங்கு விளையும் கிராம்பு பொருட்களின் தரத்தை பறைசாற்றும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம் மற்றும் கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கங்களால் கன்னியாகுமரி கிராம்பு என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம்பு பொருட்களின் தரம் மற்றும் மதிப்பு பாதுகாக்கப்படுவதுடன், தரமான பொருட்கள் கிடைப்பதும் உறுதி செய்யப்படுகிறது.

Related Stories: