2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிப்பு!!

ஸ்டாக்ஹாம் : 2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கிய துறைக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.  தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு 2021ம் ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  தான்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.21 வயதில் இருந்து எழுதி வரும் அப்துல் ரசாக் பல நாவல்களை எழுதியுள்ளார். காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் குறித்து சமரசம் இல்லாமல் தனது நாவல்களை படைப்பவர் அப்துல் ரசாக். வளைகுடா நாடுகளில் அகதிகள் குறித்து அப்துல் ரசாக் எழுதிய புத்தகத்திற்காக இலக்கியதுறைக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படுகிறது.இவருக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படும்.

Related Stories: