ராணுவம் அறிவிப்பு பாக். உளவு அமைப்பின் தலைவர் திடீர் மாற்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கிய உளவு அமைப்பான ஐஎஸ்ஐ தலைவர் பதவியிலிருந்து பைஸ் ஹமீது திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நதீம் அன்ஜூம் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் மிக முக்கிய உளவு அமைப்பாக இன்டர் சர்வீஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பின் தலைவராக கடந்த 2019 ஜூனில் பைஸ் ஹமீது நியமிக்கப்பட்டார். ஐஎஸ்ஐ.யின் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக இருந்த ஹமீது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் பஜ்வாவுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்கும் சமயத்திலும் ஹமீது காபூல் சென்று, தலிபான் அமைச்சர்கள் நியமனத்திலும் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், ஹமீது திடீரென பெஷாவர் படைத் தளபதியாக மாற்றப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. அதே சமயம், புதிய ஐஎஸ்ஐ தலைவராக த நதீம் அன்ஜூம் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: