பட்டாசு உற்பத்தியில் விதிமுறை மீறல் சிபிஐ குற்றச்சாட்டில் உண்மை இல்லை: தமிழக உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதனை வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய மாற்றங்களை செய்து கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, இந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது நீதிமன்றம் முன்னதாக நிர்ணயம் செய்துள்ள கால நேரத்தின் அளவை கூடுதலாக அதிகரிக்க வேண்டும் என தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள சங்கத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த விவகாரத்தில் சிபிஐ கண்டறிந்த ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தொடர்பாக பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் பதிலளிக்க  என கடந்த 29ம் தேதி உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக பட்டாசு உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ‘பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் எந்தவித விதி மீறலிலும் ஈடுபடவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.  

பேரியம் நைட்ரேட் பட்டாசில் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருந்ததாக சிபிஐ கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. செறிவூட்டப்பட்ட பேரியம் வேதிப்பொருளுக்கு வருங்காலத்தில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை சேமித்து மட்டுமே வைத்துள்ளோம். 30 சதவீதம் பேரியம் வேதிப்பொருள் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது. எனவே, பட்டாசு உற்பத்தியில் விதிமீறலில் எதுவும் ஈடுபடவில்லை,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: