கொரோனா பரவல் தடுக்க விடுமுறை விடப்பட்டது ஊட்டி அரசு கலை கல்லூரி 1 வாரத்திற்குப் பின் திறப்பு

ஊட்டி : கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஒரு வார விடுமுறைக்கு பின் நேற்று முதல் மீண்டும் கல்லூரி செயல்பட துவங்கியது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் கடந்த மாதம் 1ம் தேதி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளில் அனைத்து வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஊட்டி அரசு கலை கல்லூரியை பொருத்த வரை சுமார் 3500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வார துவக்கத்தில் இக்கல்லூரியில் பணியாற்றும் விரிவுரையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்டோரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொண்டதில் மேலும் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட. இதையடுத்து பாதுகாப்பு கருதி கல்லூரிக்கு கடந்த 3ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தொடர்ந்து கல்லூரி வளாகம், வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் சுமார் 1 வார காலத்திற்கு பின் நேற்று முதல் கல்லூரி திறக்கப்பட்டது.ஏராளமான மாணவர்கள் கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் முக கவசம், தனிமனித இடைவளெி கடைபிடிப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே நடப்பு ஆண்டில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களுக்கும் நேற்று முதல் வகுப்புகள் துவங்கியுள்ளது. முதல் நாளான நேற்று முதலாமாண்டு மாணவர்கள் 80 சதவீதம் பேர் கல்லூரிக்கு வந்திருந்தனர்.

Related Stories: