ஆசிய கோப்பை கால்பந்து இந்தியா வங்கதேசம் ஆட்டம் டிரா

மாலே: 13வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மாலத் தீவில் தொடங்கி நடந்து வருகிறது. இதில், இந்தியா உட்பட 5 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி தனது முதல் போட்டியில் நேற்று வங்கதேசத்துடன் மோதியது. கேப்டன் சுனில் சேத்ரி ஆட்டம் தொடங்கிய 26வது நிமிடத்தில், முதல் கோலை அடித்தார். இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில், பதில் கோல் அடிக்க வங்கதேச அணி தொடர்ந்து முயற்சித்தும், பலனில்லை. 2வது பாதி ஆட்டம் தொடங்கியதும், வங்கதேச வீரர்கள் தாக்குதல் முரட்டு ஆட்டத்தை கடைபிடித்தனர்.

இதனால், வங்கதேச வீரர் கோஷ்சுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது. இதனால், அந்த அணி 10 வீரர்களுடன் வங்கதேசம் ஆடியது. ஆட்டத்தின் 74வது நிமிடத்தில், வங்கதேச வீரர் யாசின் அராபத், அபாரமாக பதில் கோல் அடித்தார். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. கடைசி வரை இருதரப்பும் கோல் போட முடியாததால், இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 7ம் தேதி இலங்கையுடனும், 10ம் தேதி நேபாளத்துடனும், 13ம் தேதி மாலத் தீவுடனும் மோதவுள்ளது.

Related Stories: