ஐபிஎல் டி20: டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

துபாய்: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி அணிக்கு 137 ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனால் முதலில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ருதுராஜ் கைக்வாட் 13, டூபிலிஸிஸ் 10, உத்தப்பா 19, மொய்தீன் அலி 5, அம்பாதி ராயுடு 55, தோனி 18 ரன்கள் எடுத்தனர். டெல்லி அணி பந்துவீச்சில் ஆன்ரிச் நோட்ஜ் 1, அவேஷ் கான் 1, அக்சர் படேல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 விக்கெட் வீழ்த்தினர். 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி அணி களமிறங்க உள்ளது.

Related Stories: