10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்..!!

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றை தாங்கள் பயின்ற பள்ளியில் இருந்து இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்த சூழலில் 2020 - 21ம் ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. அனைவரும் தேர்ச்சி என்றதும், எப்படி மதிப்பெண் பட்டியல் தயாரிப்பது என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்த வீண் குழப்பங்களை தவிர்க்க 10ம் வகுப்பு பொது தேர்வு சான்றிகளில் அனைவரும் தேர்ச்சி என்று குறிப்பிடப்பட்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும், உயர்கல்வி சேரும் மாணவர்களின் சேர்க்கையின் போது, அவர்களது 9ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி 10ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்று இணையத்தில் வெளியாகியது.

இதன் தொடர்ச்சியாக அசல் மதிப்பெண் சான்றை இன்று முதல் தங்கள் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. அனைத்து பள்ளி மாணவர்களும் இன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்வுத்துறை கூறியுள்ளது. மேலும் அரசு வேலைவாய்ப்பு இணையதளம் வேலைவாய்ப்புக்காக முன்பதிவு செய்யப்படுகிறது. அதற்கான ஆவணங்களை கொண்டுவருமாறு மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர் அல்லது பெற்றோர் சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories: