ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தா.மோ. அன்பரசன் தீவிர பிரசாரம்

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு  உட்பட்ட 5வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி செயலாளரும், செங்கல்பட்டு சட்டமன்றதொகுதி  தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கே.பி.ராஜன் துணைவியார் பூங்கோதை ராஜன் மற்றும் தலைவர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கொளுத்தும் வெயிலில்  திறந்த ஜீப்பில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கடாபுரம், குருவன்மேடு, ஆப்பூர், ரெட்டிப்பாளையம், ஆத்தூர் வேம்பாக்கம் பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வழிநெடுக திமுக வேட்பாளர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் அமோக வரவேற்பு அளித்தனர்.

அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, ‘‘மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் பூங்கோதை ராஜன், ஊராட்சிமன்ற தலைவர்,ஒன்றியகவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற செய்தால், உங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கை களையும் தீர்த்து வைக்க முடியும். ஏனென்றால், ஆட்சி நம்ம ஆட்சி என்பதால் எது தேவையென்றாலும் முதல்வரிடம், கலெக்டரிடம் சொல்லி பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியும். தமிழக அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்றுதரலாம்.’’ என்றார். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எம்.கே.டி கார்த்திக், ஆப்பூர் சந்தானம்,காட்டாங்கொளத்தூர் ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் வி.ஜி.திருமலை,வி.ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: