உள்ளாட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ ஆகியோர் நேற்று தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

 திருப்போரூர் ஒன்றியம் தண்டலம் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிடும் ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஜோஸ்பின் விஜி, செம்பாக்கம் ஊராட்சி வேட்பாளர் சரவணன், கரும்பாக்கம் ஊராட்சி வேட்பாளர் திருமலை, மாவட்ட கவுன்சிலராக போட்டியிடும் ஜெயச்சந்திரன், மானாம்பதி ஊராட்சி தலைவர் வேட்பாளர் நளினி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் சத்யா சேகர் ஆகியோரை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கிய அவர்கள் ஆலத்தூர், பையனூர், பட்டிபுலம், நெம்மேலி, ஆமூர், சிறுதாவூர் ஆகிய ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் திருப்போரூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், நகர செயலாளர் தேவராஜ் உள்பட பலர் உடன் சென்றனர்.

Related Stories: