கடனுக்கு மேல் கடன் கொடுத்து 42 நாடுகளை அடிமையாக்கிய சீனா: தப்ப முடியாத அளவுக்கு கெடுபிடி ஒப்பந்தம்

வாஷிங்டன்: பொருளாதார பாதை திட்டத்தின் மூலம் கடனுக்கு மேல் வழங்கி 42 உலக நாடுகளை சீனா அடிமையாக்கி உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வில்லியம் அண்ட் மேரி கல்லூரி், ‘உதவி புள்ளி விவரம்: `பொருளாதார பாதை திட்ட செலவு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சீனா தனது எல்லையை மறைமுகமாக விரிவுபடுத்த நோக்கத்தில் பொருளாதார பாதை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம், பல்வேறு நாடுகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவி செய்வதாக கூறி, பல ஆயிரம் கோடி கடன் மட்டுமே வழங்கி வருகிறது. நிதி உதவியை செய்யவில்லை.  

அதேபோல், இத்திட்டத்தின் கீழ் 165 நாடுகளில் சீனா செயல்படுத்தி வரும் 13,427 மேம்பாட்டு திட்டங்களில், 35 சதவீத திட்டங்களை செயல்படுத்துவதில் ஊழல் புகார்கள் குவிந்துள்ளன. இந்த திட்டங்களின் மொத்த செலவு ரூ.62 லட்சத்து 38 ஆயிரத்து 200 கோடி. மேலும், இந்த திட்டங்களில் தொழில் துறை விதிமீறல்கள், சுற்றுச்சூழல் சிக்கல்கள், பொதுமக்கள் எதிர்ப்பு என பல்வேறு சிக்கல்களும் நிறைந்துள்ளன. மேலும், கடனுக்கு மேல் கடன் வழங்கி 42 நாடுகளை, தன்னிடம் இருந்து மீறி செல்ல முடியாத வகையில் சீனா பெரும் கடன் சுமையில் சிக்க வைத்துள்ளது. இந்த நாடுகளின் கட்டமைப்பிற்கு உதவுவதாக கூறி, அவற்றை கடனாளியாக்குவதே சீனா குறிக்கோளாக கொண்டுள்ளது.

இந்த நாடுகள் சீனாவுக்கு வழங்க வேண்டிய கடன், அந்நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட 10 சதவீதம் அதிகமாக இருக்கிறது. மேலும், கடன் வாங்கிய நாடுகளிடம் இருந்து கடனுக்கும் அதிகமான பிணையை வாங்கி இருப்பதன் மூலம், சீனா பலத்த கடன் பாதுகாப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், சீனா தனது நாட்டில் போதிய அளவு இல்லாத வளங்களை சரிக்கட்டவும் முதலீட்டு வருமானமாக டாலர், யூரோக்களை பெற்று அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்துவதன் மூலம், ஊழலில் சிக்கி தவிக்கும் உலக பணக்கார நாடுகளுக்கு நாணய மதிப்பிலான கடன் வழங்கும் ஏற்பாட்டை செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் போன்றவை சீனாவிடம் அதிகளவில் கடன் வாங்கி சிக்கி உள்ள நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

23வது இடத்தில் இந்தியா

சீனாவிடம் இருந்து 2000ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை மிக அதிகளவில் கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா 23வது இடத்தில் உள்ளது.

நாடு        கடன் தொகை (கோடியில்)

ஈராக்        59,200

வட கொரியா    53,058

எத்தியோப்பியா    48,618

ரஷ்யா        11,23,320

வெனிசுலா    6,06,504

அங்கோலா    3,73,478

இந்தியா        65,564

குவாட் அமைப்புக்கு

சீனாதான் ஒரே குறி?

அமெரிக்க ராணுவத்தின் ஊடக செயலாளர் ஜான் கிர்பி கூறுகையில், ``குவாட் நாடுகளின் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு நாடுகளின் விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது. சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்படவில்லை. அதே நேரம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா அத்துமீறி ஆக்கிரமிப்பது, முரட்டுத்தனமாக செயல்பாடு ஆகியவை அடிக்கடி ஆலோசிக்கப்படுகிறது,’’ என்றார்.

Related Stories: