உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன், வாக்கு சேகரித்தார். திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 50 ஊராட்சி மன்ற தலைவர், 22 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று காலை தேர்தல் பிரசாரம் செய்தார். இவர் முட்டுக்காடு, கோவளம், கேளம்பாக்கம், தாழம்பூர், படூர், புதுப்பாக்கம், சிறுசேரி ஆகிய ஊராட்சிகளில் போட்டியிடும் திமுக ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி இருந்தார்.

Related Stories:

>