அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி: காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீரன் ராஜினாமா

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய மாநில தலைவராக கண்ணூர் எம்பி சுதாகரன் நியமிக்கப்பட்டார். இதன்பிறகு மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதில் தங்களது கோஷ்டிகளை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக தங்களிடம் எந்த ஆலோசனை நடத்தவில்லை என்று மூத்த தலைவர்களான உம்மன்சாண்டி, ரமேஷ் சென்னித்தலா உள்பட தலைவர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டினர். இதை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களான அனில்குமார், கோபிநாத் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தது காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அதை மாநில தலைவர் சுதாகரன் மறுத்தார். இந்தநிலையில் மூத்த தலைவரும், முன்னாள் மாநில தலைவருமான சுதீரன் காங்கிரஸ் அரசியல் விவகார குழு பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னிடம் அலோசிக்காமல் நிர்வாகிகளை நியமித்தது தான் சுதீரன் ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து சுதீரனுடன் பேச்சுவார்த்ைத நடத்தி அவரை சமாதானபடுத்துமாறு கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் சோனியா வலியுறுத்தினார். அதன்படி பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.

Related Stories: