நகராட்சி பகுதிகளில் குப்பைக்கு தீவைப்பதால் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் :  விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குப்பைக்கு தீவைப்பதால் வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்பட்டு வருகின்றனர்.விருதுநகர் நகராட்சி பகுதிகளில் குப்பைத்தொட்டிகள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்ட நிலையில், குப்பைகளை வீடு, வீடாக வாங்கும் நடைமுறை தொடர்கிறது. பல பகுதிகளில் வீடுகள், கடைகளுக்கு சென்று குப்பை வாங்கும் நடைமுறையில் தொய்வுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் குப்பைகளை தெரு ஓரங்கள், சாலையோரங்கள், கவுசிகா ஆற்றுப்படுகை, திறந்த வெளிகளில் கொட்டி தீ வைத்து விடுகின்றனர்.

இதனால் எழும் புகையால் வாகன ஓட்டிகளுக்கு கண்பார்வை கோளாறு, சுவாசக்கோளாறு பாதிப்புகள் ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை வீடுகள், கடைகளில் முழுமையாக வாங்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>