விளையாட்டு செய்திகள்

* இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளிடையே நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில், ஆஸி. அணி 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில் கடைசி போட்டி மெக்கே நகரில் இன்று நடக்கிறது.

* ‘கிறிஸ்டியானோ ரொனால்டோ  தன்னை மேம்படுத்திக் கொள்ளும்விதம் முக்கியமானது. அதனால்தான் அவர் 40 வயது வரை  சர்வதேச களத்தில் இருந்தாலும்  நான் ஆச்சர்யப்பட மாட்டேன். தனது ஆற்றலை, முழுமையாக விளையாட வெளிப்படுத்துகிறார்’ என்று மான்செஸ்டர் யுனைட்டட் அணியின் பயிற்சியாளர் ஓலே குன்னர் சோல்ஸ்கேர் பாராட்டி உள்ளார்.

* பின்லாந்தின் வான்டா நகரில் இன்று தொடங்கும் சுதிர்மான் கோப்பை கலப்பு குழு பேட்மின்டன் தொடரின் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் சீனா, தாய்லாந்து, பின்லாந்து அணிகளின் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது.

* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த 18 வயது இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுகானு, தனது பயிற்சியாளர் ஆண்ட்ரூ ரிச்சர்ட்சனை நீக்க முடிவு செய்துள்ளார்.

Related Stories:

>