வேண்டுராயபுரத்தில் இடியும் அபாய நிலையில் அரசு பள்ளிக்கட்டிடம்-அகற்ற கிராமமக்கள் கோரிக்கை

சிவகாசி : சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 40 ஆணடுகளுக்கு முன்பு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் பள்ளிக்கு காலனி பகுதியில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

பழைய கட்டிடம் முழுமையாக பழுதடைந்து காட்சியளிக்கிறது. கட்டிடத்தின் பல இடங்களில் மிகவும் மோசமாக விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் தன்மை செயலிழந்து சிமெண்ட் காரைகள் சரிந்து விழுந்து காணப்படுகின்றது.இந்த பழமையான கட்டிடம் கிராமத்தின் மையப்பகுதியில் இருப்பதால் கட்டிடம் அருகே குழந்தைகள் ஆபத்து அபாயம் தெரியாமல் விளையாடுகின்றனர். பருவமழை தொடங்க உள்ள நிலையில் கட்டிடம் இடிந்து விழும் அபாயமும் உள்ளது. எனவே, இந்த கட்டிடத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>