சில்லி பாயின்ட்...

* பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் ரத்து செய்த நிலையில், ‘திட்டமிட்டபடி டிசம்பர் மாதம் பாகிஸ்தான் சென்று விளையாடுவோம்’ என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அலுவலர் ஜானி கிரேவ் உறுதி அளித்துள்ளார்.

* பிரான்சின் செயின்ட் பாரிஸ் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணியில் இணைந்துள்ள நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி முதல் 2 போட்டியில் கோல் அடிக்கத் தவறினார். காயம் காரணமாக நேற்று முன்தினம் மெட்ஸ் அணியுடன் மோதிய ஆட்டத்திலும் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு நடைபெற உள்ள மொன்ட்பெலியர் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இருந்தபோது பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஐபிஎல் தொடரில் அந்த அனுபவம் கை கொடுக்கிறது என்று கேகேஆர் வேகம் கார்த்திக் தியாகி கூறியுள்ளார்.

* கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேகப் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பதிலாக, ஐதராபாத் அணியில் தற்காலிகமாக உம்ரான் மாலிக் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>