பிஎஸ்ஜி அணிக்கு 6வது வெற்றி

பிரெஞ்ச் லீக் 1 கால்பந்து தொடரில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி தொடர்ச்சியாக 6வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. பிரின்சஸ் டி பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் லியோன் அணியுடன் மோதிய பிஎஸ்ஜி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. அந்த அணியின் நெய்மர் 66வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பிலும், இகார்டி (90’+3) கடைசி கட்டத்திலும் கோல் போட்டனர். லியோன் சார்பில் டோலன்டினோ லிமா (54வது நிமிடம்) கோல் அடித்தார். பிஎஸ்ஜி அணியில் மீண்டும் இணைந்துள்ள நட்சத்திர வீரர் மெஸ்ஸி (34 வயது) இதுவரை கோல் ஏதும் அடிக்காமல் இருப்பது ரசிகர்களை ஏமாற்றத்தைல் ஆழ்த்தியுள்ளது. இந்த போட்டியில், இடைவேளைக்குப் பிறகு மெஸ்ஸி வெளியே அழைக்கப்பட்டு மாற்று வீரராக ஹகிமி களமிறங்கியது குறிப்பிடத்தக்கது. பிஎஸ்ஜி அணி 6 போட்டியில் 6 வெற்றியுடன் 18 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Related Stories:

>