9 மாவட்டங்களில் 2 கட்ட உள்ளாட்சி தேர்தல் எதிரொலி திமுக கூட்டணி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மாவட்ட , ஒன்றிய குழு வார்டுகளில் போட்டியிடுவோர் பெயர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 2 கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுகவினர் மற்றும் கூட்டணியினர் பெயர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் வேலூர், தென்காசி, நெல்லை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்கள் அடங்கும். வேட்புமனு தாக்கல் செய்ய குறுகிய நாளே இருப்பதால், திமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல அதிமுக சார்பில் பாஜவுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடக்கும்போதே, வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.

இது கூட்டணி கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாமக, மநீம உள்ளிட்ட சில கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இந்நிலையில், திமுக சார்பில் காஞ்சி வடக்கு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி குழு - ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளில் வார்டு உறுப்பினர்கள் பொறுப்புக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார். அதில் திமுக வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டம், வார்டு 3 குண்ணம் ராமமூர்த்தி மற்றும் மதிமுக, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள், வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

Related Stories:

>