காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட உள்ள முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள்- எஸ்.லலிதா (காஞ்சிபுரம் ஒன்றியம்), கோமதி ரமேஷ் (வாலாஜாபாத் ஒன்றியம்), ராமச்சந்திரன் (ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்), எஸ்.இளவரசு (போந்தூர், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம்), எஸ்.எம்.சுந்தர்ராஜன் (நந்தம்பாக்கம், குன்றத்தூர் ஒன்றியம்), முருகதாஸ் (கொளப்பாக்கம்), மாலா புண்ணியகோட்டி (படப்பை, குன்றத்தூர் ஒன்றியம்), ஹேமலதா (வாரணவாசி, வாலாஜாபாத் ஒன்றியம்), விஜயா உலகநாதன் (களக்காட்டூர், காஞ்சிபுரம் ஒன்றியம்), அருணா வில்வபதி (மானாம்பதி, உத்திரமேரூர் ஒன்றியம்), முருகன் (திருவந்தவார், உத்திரமேரூர் ஒன்றியம்).

செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள்- எம்.பி. கண்ணபிரான், எம்.கஜா செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், எஸ்.மோகனபிரியா, அஜய் சி.மோகன்குமார் (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்), நாவலூர் முத்து (செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம்), ஆனூர் வி.பக்தவச்சலம், டி.சுஜாதா, பிரமிளா விவேகானந்தன், ஆர்.இந்துமதி பிரவின்குமார், கே.சந்திரன், நித்யா ரமேஷ், கே.பி.அரிகிருஷ்ணன், வி.எஸ்.ஆர்.ரஞ்சினி, ஆர்.மகேஸ்வரி, காஞ்சிபுரம் ஒன்றியம் - மீனாட்சி (கீழ்சிறுணை), பார்த்தசாரதி (துலங்கும் தண்டலம்), ஜீவானந்தம் (திருப்பருத்திக்குன்றம்), தமிழரசி (கோனேரிக்குப்பம்), நதியா (சிறுகாவோிபாக்கம்), விமல்ராஜ் (கீழம்பி), சுமதி ஜீவானந்தம் (திருப்பருத்திக்குன்றம்), ஜெயந்தி (கீழ்கதிர்பூர்), ஹேமலதா ரவிக்குமார் (விப்பேடு), விஜயன் (மேலபேரமநல்லூர்), பேபி ஷகிலா (களக்காட்டூர்), அல்லி (மாகறல்), வசுமதி (காவாந்தண்டலம்). ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

* பொறுப்பாளர்கள் நியமனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுடன், மைதிலி திருநாவுக்கரசு (முன்னாள் எம்எல்ஏ), வாலாஜாபாத் கணேசன் (முன்னாள் எம்எல்ஏ) ஆகியோர் இன்று முதல் கூடுதலாக நியமிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>